இந்தியா, ஏப்ரல் 17 -- செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபரால் நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் சாதிய பாகுபாடு காரணமாக சின்னதுரை என்ற மாணவர் சக மாணவர்களால் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்பத்தி இருந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த தாக்குதலில் இருந்து மீண்ட சின்னதுரை பிளஸ்-2 தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்டோரின் பாராட்டுகளை பெற்று இருந்தார். தற்போ...