இந்தியா, மார்ச் 20 -- நல்ல பழக்கங்களை பழகுவது மிகவும் கடினம். அதற்கு உங்கள் மூளையை பழக்குவது எப்படி என்று பாருங்கள். நல்ல பழக்கங்களை வளர்ப்பது எப்படி என்று பாருங்கள். ஒருவரின் வெற்றியின் காரணம் கட்டாயம் கடின உழைப்புதான். அதற்கு அவர்கள் வாழ்வில் கடைபிடித்த நல்ல பழக்கவழக்கங்களே அடித்தளம். உங்களின் மூளை நல்ல பழக்கவழக்கங்களை பழகிக்கொள்ள அதற்கு எப்படி பயிற்சியளிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சிறிய மற்றும் நிலையாக நீங்கள் முன்னோக்கிச் செல்வது பெரிய இலக்குகளை நீங்கள் எட்டிப்பிடிக்க நீண்ட காலத்துக்கு உதவும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு நல்ல பழக்கத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுக்ஙள். இதை சுலபமாகவும், எளிதில் சாதிக்கக் கூடியதாகவும் மாற்றுங்கள். தொடர்ந்து செய்வதுதான் இங்கு முக்கியம். எனவே எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் தொடர்ந்துகொண்டேயிருங்...