இந்தியா, மே 14 -- நரசிம்மா: உலகம் முழுவதும் விஷ்ணு பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் இருந்து வருகின்றனர். பல வரலாறுகளைக் கொண்டு சிற்பங்களின் கலைக்கூடமாக எத்தனையோ விஷ்ணு பகவான் கோயில்கள் நமது நாட்டிலிருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில்.

எட்டாம் நூற்றாண்டில் இருந்த வைணவ கோயில்களில் இந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலும் ஒன்றாகும். 108 திவ்யதேசங்களில் இந்த திருக்கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் இருக்கக்கூடிய கோபுரம், மண்டபம் அனைத்தும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றது.

இந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னரான ராஜா முதலாம் நரசிம்ம வர்மனால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. இந்த திருக்கோயிலில் திருமாலின் ஐ...