இந்தியா, ஏப்ரல் 25 -- நிழற்குடை: நடிகை தேவயானி நடித்து வெளியாக இருக்கும் நிழற்குடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் நமிதாவோட ஒரு சீன் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது. மேலும் தேவயானி நடிப்பை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நகைச்சுவையாக பேசியுள்ளார்.

இந்த நிழற்குடை என்ற திரைப்படத்தை சிவா ஆறுமுகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தேவயானி, வடிவுக்கரசி, கண்மணி மனோகரன், நீலிமா ராணி உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற மே மாதம் ஒன்பதாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று செ...