இந்தியா, மார்ச் 24 -- நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசியவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார்.

அண்டை மாநில முதலமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் நெருக்கமாக இருக்கும்போது, தண்ணீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாமே என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதற்கு, "பேச்சுவார்த்தைகளால் பயனில்லை என்பதால்தான் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் அண்டை மாநில முதலமைச்சர்களுடன் விரோதமாக இருந்ததி...