இந்தியா, ஜூன் 16 -- ஹாங்காங்கில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி அளித்த தகவலையடுத்து விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்பட்ட விமானம் ஏஐ315, ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் கிளம்பிய இடத்துக்குத் திரும்பியது.

முன்னதாக, ஹைதராபாத் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தரையிறங்குவதற்கான அனுமதியைப் பெறத் தவறியதால் யு-டர்ன் செய்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிராங்பேர்ட்டில் இருந்து புறப்பட்ட LH752 விமானம் திங்கள்கிழமை அதிகாலை ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர திட்டமிடப்பட்டது. ஆனால், விமானம் நடுவ...