இந்தியா, ஜூன் 1 -- நடிகை நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பெண் நடிகைகள் குறித்த பார்வை தன்னை சங்கடப்படுத்துவதாக தெரிவித்தார்.

சாதாரண பெண்களை நடத்தும் விதத்தில் யாரும் நடிகைகளை நடத்துவதில்லை. நாங்கள் நடிகைகள் என்பதால், எங்களை எளிதில் அணுகலாம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாங்கள் ஒரு நிகழ்வுக்குச் செல்லும்போதெல்லாம், ரசிகர்கள் எங்களை கைகுலுக்கச் சொல்வார்கள். ஆனால், ஒரு சாதாரண பெண்ணிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை. நடிகைகளை எளிதில் அணுகலாம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொட்டு பேசவும் ஒட்டி புகைப்படம் எடுக்கவும் சுலபமாக நினைக்க நாங்கள் என்ன பொம்மைகளா?" என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, நித்யா மேனன் ஒரு நிகழ்ச்சியி...