இந்தியா, ஏப்ரல் 21 -- மலையாள நடிகர் மோகன்லால் தன் வாழ்வில் சிறந்த தருணங்களில் ஒன்றை ஒரு பரிசின் மூலம் பெற்றதாகக் கூறி மக்களிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் மோகன்லால் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியிடமிருந்து பெற்ற பரிசின் வீடியோவை பகிர்ந்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

லியோனல் மெஸ்ஸி மோகன்லாலை 'லாலட்டன்' (அண்ணா) என்று அழைத்து ஜெர்சியில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார்.

இதை தன் வாழ்வில் சில தருணங்களில் ஒன்று.. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவை என்றென்றும் என் நினைவில் இருக்கும். அத்தகைய ஒரு தருணத்தை நான் அனுபவித்தேன் எனக் கூறியுள்ளார்.

பரிசை மெதுவாகத் திறந்தபோது, என் இதயம் படபடவென துடித்தது. இது லியோனல் மெஸ்ஸியே கையெழுத்திட்ட ஜெர்சி. என் பெயர், அவரது சொந்தக் கையால் எழுதப்பட்டது." என்று தன்...