இந்தியா, மார்ச் 26 -- நடிகரும் இயக்குனரும் ஆன மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். இது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதலே மனோஜிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவரது உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மகள்கள் இருவரும் மிகுந்த கனத்த இதயத்துடன் மனோஜிற்கு இறுதி சடங்கினை செய்தனர். கண்ணீர் மல்க சடங்குகளை செய்த காட்சிகளை பார்த்த அனைவரும் கலங்கி நின்றனர். பாராதி ராஜாவும் கனத்த இதயத்துடன் அவரது மகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்த உடல் தகனத்தின் போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உடன் இருந்தார். மேலும் பல திரைப்பிரபலங்கள் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த மறைவு திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்...