இந்தியா, ஏப்ரல் 21 -- நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா, சிலம்பரசன் ஆகியோர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் வெளியீட்டு விழா சமயத்தின் போது, த்ரிஷாவின் வார்த்தைகளை வைத்து கமல் கூறிய ஜோக் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க| நான் ராமனை அல்ல அவரது அப்பாவை பின்பற்றி திருமணம் செய்தவன்- தக் லைஃப் பதில் தந்த கமல்

த்ரிஷா தனக்குப் பிடித்த உணவு பற்றிப் பேசினார். அப்போது, "எல்லாமே எனக்குப் பிடிக்கும், ஆனா வேக வைத்த வாழைப்பழம் ரொம்பப் பிடிக்கும். அதோட பேரு?" என்று கேட்டார். அப்போது பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் 'பழம்புரி' எனக் கூறினர். இதைக் கேட்ட த்ரிஷாவும் ஆமாம் அது ரொம்ப பிடிக்கும் என்றார். சிறிது நேரம் கழித்து, கமல்...