இந்தியா, மார்ச் 20 -- வீட்டுக்குள்ளே அழகிய வண்ணங்ளில் உள்ள குரோட்டன்ஸ் செடிகளை வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? அந்த குறிப்புகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குரோட்டன்ஸ் செடிகள் என்பவை வீட்டுக்குள்ளே அழகுக்காக வளர்க்கப்படுபவை ஆகும். இந்தச் செடிகள் பார்ப்பவரின் கண்களுக்கு அழகைத் தருவதுடன் சில மருத்துவ குணங்களும் நிறைந்தவையாக இருக்கும். இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, இதன் சாற்றில் பூஞ்ஜைக்ளுக்கு எதிரான குணங்களும் உள்ளது.

குரோட்டன்ஸ் செடிகளுக்கு பிரகாசமான சூரியஒளி தேவைப்படும். மறைமுக சூரிய ஒளி அதன் நிறத்தை பாதுகாக்கும். எனவே அவற்றை ஜன்னல்களுக்கு அருகில் அதிகளவில் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கவேண்டும். நேரடி சூரிய ஒளியை தவிர்க்கவேண்டும்.

குரோட்டன்ஸ் செடிகளுக்கு ஈரப்பதமான சூழல் தேவை. எனவே வீட்டுக்குள்ளே உள்ள ஈரப்பதத்தை 60 முதல் ...