இந்தியா, பிப்ரவரி 24 -- நீங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று விரும்பினால் உங்கள் மனதில் முதலில் தோன்றுவது ஒன்றுதான். அது எந்த தொட்டியில் நீங்கள் செடிகளை நட்டு வளர்க்கலாம் என்பதுதான். செடிகளை வளர்க்க தொட்டிகள் மிகவும் அவசியம். இன்று எண்ணற்ற வகை தொட்டிகள் உள்ளன. எந்த வகை தொட்டியிலும் செடிகள் செழித்து வளரும். அதில் நன்மைகளும் உள்ளது. தீமைகளும் உள்ளது. அவற்றை நீங்கள் தனியாக கவனித்துக்கொள்ளவேண்டும்.

* மண் தொட்டி

* சிமெண்ட் தொட்டி

* செராமிக் தொட்டி

* பிளாஸ்டிக் தொட்டி

என தொட்டியில் இத்தனை வகைகள் உள்ளன.

மண்தொட்டி செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. இது காற்றோட்டத்துடனும், வேர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனைக் கொடுப்பதிலும் சிறந்தது. ஆக்ஸிஜன் ஒட்டுமொத்த செடி வளர்ச்சி மற்றும் வேர்களின் சுவாசத்துக்கும் சிறந்தது. அதிக ஈரப்ப...