இந்தியா, பிப்ரவரி 23 -- அதிர்ஷ்ட மூங்கில், லக்கி பேம்பூ உங்கள் வீட்டுக்கு நேர்மறை எண்ணங்களைக் கொண்டுவரும் செடி. இது வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் தாவரங்களுள் ஒன்றாகும். இது இருக்கும் இடம் நேர்மறையாக உள்ளது. இதை பராமரிப்பதும் எளிது. இந்தச் செடி காற்றை சுத்தப்படுத்தும் ஒன்றாகும். இது உங்கள் வீடுகளுக்கும், அலுவலகத்துக்கும் இயற்கை அழகைத் தரும் ஒன்றாகும். இந்தச் செடியை பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட மூங்கிலை பிரகாசமான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். மறைமுக சூரிய ஒளி படும் இடத்தில் இந்தச் செடியை வைக்கவேண்டும். இதனை நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால், சூரியனின் கடுமையான கதிர்கள், இந்தச்செடியின் இலைகளை கருக்கிவிடும். இந்தச்செடியை கடும் இருளான இடத்தில் நீண்ட நேரம் வைக்கும்போது, அது உங்கள் செடியைக் கொல்லும். எனவ...