இந்தியா, ஏப்ரல் 1 -- அதன் நிறம், குணம் மற்றும் அதில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக டிராகன் பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்றாகிவிட்டது. இதை நீங்கள் எண்ணற்ற காரணங்களுக்காக சாப்பிடலாம். ஆனால் இதன் விலை கொஞ்சம் அதிகம் தான். எனவே இதை நீங்கள் வீட்டிலே வளர்ப்பது நல்லது. இந்தச் செடியை வீட்டிலே வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.

நீங்கள் விதைகளை வைத்தும் டிராகன் பழங்களை வளர்க்க முடியும். இதற்கு பழம் கொடுக்க குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஓரிரு ஆண்டுகளில் பழம் கிடைக்க நீங்கள் அந்த செடியை வாங்கி வளர்ப்பது சிறந்தது அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் இருந்தால், அந்தச் செடியை வெட்டி அதையும் நட்டு வைக்கலாம்.

டிராகன் பழங்களை வளர்க்க சிறந்த நேரம், இதமான வெப்பநிலை இருப்பதுதான். இலையுதிர் காலம் அல்லது கோடைக்கால துவக்கம்தான் இந்தப் ...