இந்தியா, மார்ச் 14 -- இந்திய சமையலறையல் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் முக்கியமானது மல்லித்தழையாகும். இதை நீங்கள் சிக்கன் சூப் முதல் உப்புமா வரை அனைத்து உணவிலும் சேர்க்கவேண்டும். அப்போதுதான் உணவின் மணம் அதிகரிக்கும். காய்கறிகள், சாம்பார் முதல் கிரேவி வரை அனைத்தின் சுவையையும் அதிகரிக்கச் செய்வது இந்த மல்லித்தழையாகும். இதை நீங்கள் வீட்டிலே தண்ணீரில் வைத்தே வளர்த்துவிட முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

முழு மல்லி விதைகளை, நல்ல தரமானதா என பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். உடைந்திருக்கவோ அல்லது புழு, பூச்சி வைத்திருக்கவோ கூடாது. நல்ல மெத்தென்ற விதைகளாக அவை இருக்கவேண்டும்.

நீங்கள் அந்த விதைகளை முன்னரே ஊறவைத்துக்கொள்ளலாம் அல்லது பின்னரும் ஊறவைத்துக்கொள்ளலாம். ஒரு தரையில் விதைகளை வைக்கவேண்டும். அதை மெதுவாக உடைக்கவேண்டும். இரண்டாக அது உடைந்து வரவ...