இந்தியா, பிப்ரவரி 25 -- வசந்த காலம்தான் காய்கறிகளை விளைவிக்க ஏற்ற காலமாகும். நீங்கள் உங்கள் சமையலறை தோட்டத்திலே வளர்க்க ஏற்ற சில காய்கறிகளை இங்கு கொடுத்துள்ளோம். இதற்கு முழு சூரிய ஒளியும், இதமான வெப்பநிலையும் தேவை. இதை நீங்கள் இந்தியாவில் கோடை காலத்தில் பயிரிடலாம். இதை நீங்கள் இப்போது விதைத்துவிட்டால் இவை மழைக்காலம் வரை காய் தருபவையாகும். நீங்கள் கோடையில் பயிரிட ஏற்ற காய்கறிகள் எவை என்று பாருங்கள்.

காய்கறிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தினமும் 5 முதல் 6 மணி நேர வெப்பம் தேவை. மல்லி, கீரை, புதினாவுக்கு 3 மணி நேரம் வேண்டும். இவை சூரிய ஒளி படும் இடத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். பால்கனி, திறந்தவெளி மற்றும் மொட்டை மாடியில் வைக்கவேண்டும்.

பைகள் அல்லது தொட்டிகள் என எதில் வைத்தாலும், அதன் வேர்கள் வளர போதிய இடம் இருக்கவேண்டும். கீரைக...