இந்தியா, ஏப்ரல் 20 -- உங்கள் பால்கனி தோட்டத்தில் இடம் இல்லையா? இடப்பற்றாக்குறையால் ஒரே தொட்டியில் இரண்டு செடிகளை வளர்க்க முடியுமா என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம் இல்லையா? எனில், புதினா மற்றும் செரி தக்காளிப் பழங்களை ஒரே தொட்டியில் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள். அவற்றை எப்படி விரைவாக அறுவடை செய்யலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரே தொட்டியில் இரண்டு செடிகளை வளர்க்கவேண்டும் என்று விரும்பினால் அதற்கு நீங்கள் பயன்படுத்தும் தொட்டி பெரியதாகவும், மிகவும் ஆழமானதாகவும் இருக்கவேண்டும என்பதை உறுதிப்படுத்துங்கள். இந்த தொட்டிகள் 18 முதல் 20 இன்ச் ஆழமும், நீளமும் இருக்கவேண்டும். ஏனெனில் புதினா மற்றும் செரி தக்காளி ஆகிய இரண்டின் வேர்களும் படர்ந்த் வளர இடம் தேவை.

செரி தக்காளிப் பழங்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டுக்கும் நல்ல துவாரம...