இந்தியா, மே 22 -- ஜேட் செடி, இது செல்வத்தைக் கொண்டுவரும் குபேரச் செடி என்றும் அறியப்படுகிறது. இந்தச் செடியை உங்கள் வீடுகளில் வளர்ப்பதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஜேட், அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் செடி, உங்கள் வீட்டுக்குள்ளும், பால்கனிக்குள்ளும் கொண்டுவர ஏற்ற சிறந்த செடியாகும். இதன் தடிமனான இலைகள், நேராக வளரும் தண்டுகள் மற்றும் அழகிய மலர்கள் என அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் ஏன் ஜேட் செடிகளை வளர்க்க வேண்டும் என்று பாருங்கள்.

சில வீட்டுக்கு உள்ளே வளர்க்கக்கூடிய செடிகள், எப்போது எவ்வித வளர்ச்சியையும் எட்டாது. ஆனால் ஜேட் செடிகள் விரைவாக வளர்ந்துவிடும். இந்தச் செடி அதன் தண்டுகளை விரைவாக வளரச்செய்யும். புதிய இலைகளும் துளிர்விடும். இது ஓரிரு வாரத்தில் நன்றாகவே வளர்ந்துவிடும்.

உங்கள் வீ...