இந்தியா, பிப்ரவரி 22 -- கடலை புண்ணாக்கு உரத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. மேலும் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்களும் உள்ளது. கடலை புண்ணாக்கை மண்ணுடன் கலந்து இயற்கை மற்றும் ஆர்கானிக் உரங்களுடன் கலந்து தோட்டத்துக்கு இட்டால் உங்களின் தாவரங்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களும் கிடைத்து ஆரோக்கியமாக வளரும்.

சரியான நேரத்தில் கடலை புண்ணாக்கு உரமிடும்போது அது செடியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. புதிய இலைகள் மற்றும் கிளைகள் உருவாக வழிவகுக்கிறது. இதில் உள்ள நைட்ரஜன் இலைகள் பழுக்காமல் பார்த்துக்கொள்கிறது.

இந்த கடலை புண்ணாக்கை நீங்கள் எண்ணெய் பிழிந்தெடுக்கும் ஆலைகளிலே பெறலாம். இன்றைய காலத்தில் ஆன்லைனிலும், கடைகளிலும் கிடைக்கும்.

கடலை புண்ணாக்கு கட்டிகளாக இருக்கும். அதை நீங்கள் மிக்ஸியில் சேர்த...