இந்தியா, ஏப்ரல் 22 -- கடும் கோடையில் சூரியன் சுட்டெரிக்கும்போது தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் காய்ந்து, கருகி, சருகாகும். கடும் கோடைக்காலத்திலும் பூத்துக் குலுங்கும் மலர்கள் என்னவென்று தெரியுமா? இவற்றை உங்கள் வீட்டில் உள்ள தோட்டத்தில் அல்லது பால்கனி, மாடித் தோட்டத்தில் வைக்கும்போது உங்கள் வீட்டுக்கு குளிர்ச்சியுடன், அழகும் கிடைக்கும். அவை என்ன பூக்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சின்னியா என்ற பூச்செடி சூரிய காந்தி வகை குடும்பத்தைச் சார்ந்த பூச்செடியாகும். தமிழில் இட்லிப் பூ என்று அழைக்கப்படும். இது பூத்துக்குலுங்கும்போது பார்ப்பவர் கண்களை கவரந்து இழுக்கும். இதன் வண்ணங்கள், உங்கள் பால்கனி தோட்டத்தை அலங்கரிக்கும். இதன் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. சின்னியா மே - ஜூன் போன்ற கடுங்கோடை மாதங்களில் கூட அழகாக பூத்துக்குலுங்கும். கோடையி...