இந்தியா, மார்ச் 21 -- நீங்கள் தோட்டப் பிரியர், வீட்டில் எண்ணற்ற செடிகளை வைத்துள்ளீர்கள் என்றால் அதை கோடைக் காலத்தில் பராமரிப்பது மிகவும் கடினம்தான்.

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் கடும் வெயில், முழு சூரியன் மற்றும் வெப்பக் காற்று என்ற நாம் அல்லல்பட்டு வருகிறோம். நமக்கே இத்தனை பிரச்னைகள் ஏற்படும்போது, அது செடிகளை எவ்வளவு பாதிக்கும்? இது செடிகளுக்கு சவாலான காலம். கடுமையான சூரிய ஒளி வறட்சி, வாடுதல், இலைக்கருகல் மற்றும் செடி இழப்பு என ஏற்படுத்தும். அதை தடுப்பது எப்படி என்று பாருங்கள்.

கோடையில் நீங்கள் செய்யக்கூடிய எளிய வழி ஒன்று உண்டென்றால், அது கோடையின் கடும் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய தாவரங்களை உருவாக்குவதுதான். உங்கள் பால்கனி தோட்டத்தில் அல்லது உங்கள் செடிகளுக்கு அருகில் நீங்கள் அதுபோன்ற தாவரங்களை வளர்க்கவேண்டும். பாம்ச் செடி, சாமந்த...