இந்தியா, ஏப்ரல் 19 -- காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஐந்து முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை சார்பில் 'கலைஞர் கைவினைத் திட்டத்தை' தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், கைவினைக் கலைஞர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதோடு, சமூகநீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய அரசின் 'விஸ்வகர்மா திட்டத்தை' கடுமையாக விமர்சித்தார். 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்...