இந்தியா, ஏப்ரல் 19 -- இந்திய அளவில் பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியாக உள்ளவர் குஷ்பு., இவரது எக்ஸ் தளக் கணக்கு (ட்விட்டர்) ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், தன் ட்விட்டர் ஐடி, பாஸ்வேர்டை யாரோ ஹேக் செய்துள்ளனர், என்னால் கணக்கை லாக்இன் செய்ய முடியவில்லை என்றார்.

என் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வரும் (ஏப்ரல் 18 முதல்) செய்திகளையோ, அப்டேட்களையோ நான் பதிவிடவில்லை. இந்த பிரச்சனையை சரிசெய்ய முயற்சி செய்து வருகிறேன்.

என் ட்விட்டர் பக்கத்தில் ஏதேனும் செயல்பாடுகளைக் கண்டால் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். அதுவரை நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களை தொடர்புகொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ட்விட்டர் கணக்கை மீட்டெடுப்பது பற்றி யாருக்காவது தெரிந்தால் உதவுமாறும் கூறியுள்ளார்...