இந்தியா, ஏப்ரல் 25 -- தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வியக்கத்தக்க அரசியல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து அரசியலில் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இந்த ஆட்சி காலத்தில் தான் பாஜக - அதிமுக கூட்டணி பிளவு பட்டது. மேலும் அதிமுகவே இரண்டாக, மூன்றாக எனப் பிரிந்து பல சட்டப் போராட்டங்களை கண்டது. நடிகர் விஜயும் சமீபத்தில் தான் கட்சி ஒன்றை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பல வியத்தகு நிகழ்வுகளை காட்டப்போகிறது என்பதில் ஐயமில்லை. இந்த நிலையில் இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அவ்வப்போது திமுக அமைச்சரவை மாற்றம் பெற்று வந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் ஒரு அமைச்...