இந்தியா, மார்ச் 13 -- நாடாளுமன்ற தொகுதி மறுவரை விவகாரத்தை எதிர்த்து திமுக நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்புவிடுக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தொகுதி மறுவரை தொடர்பாக வரும் மார்ச் 22ஆம் தேதி அன்று திமுக சார்பில் சென்னையில் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆந்திரா, கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஒரிசா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நேரில் சந்தித்து அழைப்புவிடுத்து வருகிறது.

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு சென்று அழைப்பு விடுத்து இருந்தது. ஒரிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை திமுக எம்பி தயாநிதி மாறன் நேரில் ச...