இந்தியா, மார்ச் 11 -- நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழு குறித்து ஆலோசிக்கவும், அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கவும் இன்று ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தமிழக தொழில்கள் மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.பி. தயாநிதி மாறன் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாட்டின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் செய்யப்படுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், மநீம சார்பில் கமல்ஹாசன், தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் திமுகவின் தோழமைக்கட்சிகள் மற்றும் பிறகட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்....