இந்தியா, மார்ச் 7 -- நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கான முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், இந்திய மக்களாட்சி முறையின் சாராம்சம் அதன் கூட்டாட்சித் தன்மையில்தா...