இந்தியா, மார்ச் 10 -- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில் நேற்றைய தினம், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்பவும், 7 மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து குரல் எழுப்பவும் எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையி...