இந்தியா, மார்ச் 1 -- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக வரும் மார்ச் 5ஆம்தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.

பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் ஆதாரமற்ற அச்சம் குறித்து விவாதிக்க, மார்ச் 5, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, தமிழக பாஜகவை அழைத்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைத்திருந்த உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான கருத்துக்களை, இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறேம்.

தொகுதி மறுவரையறை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே தொகுதி மறுவரையறை குறித்து நீங்கள்...