இந்தியா, மார்ச் 19 -- சென்னையில் மார்ச் 22 தேதி நடைபெறும் தொகுதி'நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை' கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். கூடவே, திமுக குழு அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறது.

மேலும் படிக்க | தொகுதி மறுவரையறை: ரேவந்த் ரெட்டியை சந்தித்த கே.என்.நேரு, கனிமொழி! சொன்னது என்ன தெரியுமா?

அதன் படி, கேரள முதல்வர் பினராயி விஜயனை திமுக குழு திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு சென்று அழைப்பு விடுத்து இருந்தது.

ஒரிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தி...