Chennai, ஜூலை 3 -- தைராய்டு பிரச்னையானது பொதுவாக அதன் அறிகுறிகளை சரியான கவனிப்பதன் மூலம் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இருப்பினும், இந்த பாதிப்பு தீவிரமாக மாறுவதற்கு முன்பு, பாதிப்பு குறித்து சிறிது சந்தேகம் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இதன் தாக்கத்தை குறைக்கலாம். பொதுவாகவே தைராய்டு ஆரம்பகட்ட அறிகுறிகளுக்கு ஆய்வகத்துக்கு சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது இயல்புதான் என்றாலும் கழுத்து பகுதியை தொட்டு பார்த்து நிலைமையை புரிந்து கொள்ளலாம்.

கழுத்தின் கீழ் பகுதியில், சரியாக குரல்வளையின் கீழ் அமைந்துள்ள இந்த சுரப்பி, ஒரு சிறிய பட்டாம்பூச்சியைப் போல வடிவத்தை கொண்டதாக உள்ளது. இந்த சுரப்பியில் முடிச்சுகள் வளர்ச்சி அல்லது கோயிட்டர்கள் இருந்தால், பிரச்னை தொடங்குகிறது என்பதை ...