இந்தியா, பிப்ரவரி 11 -- Thaipusam Wishes 2025: உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா இன்று (பிப்.11) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளி நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழாவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தமிழகத்திலும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட இடங்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

2025 ஆம் ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும்...