இந்தியா, பிப்ரவரி 11 -- தைப்பூசத்தையொட்டி அதிமுக, நாம் தமிழர், பாமக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன். வெற்றிவேல் #முருகனுக்கு_அரோகரா !

"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்-முருகாதிருத்தணி மலைமீது எதிரொலிக்கும்.."

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் குடியின் ஆதி கடவுளாய், நாம் அன்போடு போற்றுகின்ற அருள்மிகு முருகப் பெருமானின் உகந்த தினமா...