இந்தியா, ஜூலை 9 -- தென்னிந்திய சினிமாக்களில் டாப் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இதையடுத்து தி பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர்களில் ஒருவரான ராஜ் நிட்மொருவுடன், சமந்தா டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக வதந்திகள் பரவ வருகின்றன. தற்போது அதை உறுதிபடுத்தும் விதமாக சமந்தாவின் அமெரிக்கா பயணத்தில் இயக்குநர் ராஜ் நிட்மொருவும் இருப்பதோடு, அவரது தோல்களை பற்றிக்கொண்டு நடந்து வருகிறார். இந்த புகைப்படம் மூலம் தங்களுக்கு இடையிலான உறவை சமந்தா உறுதிப்படுத்துவதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் தானா (TANA) என்று அழைக்கப்படும், வட அமெரிக்கா வாழ் தெலுங்கு சங்கத்தின் தானா 2025 மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து தனது பயணத்தின்போது எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்...