இந்தியா, ஏப்ரல் 30 -- தருமபுரியில் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) 19வது பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், மறைந்த தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார். விஜயகாந்தின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் பொதுக்குழு என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நீண்டகாலமாக கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதற்கு முன், எல்.கே. சுதீஷ்...