சென்னை,டெல்லி,மும்பை, மார்ச் 25 -- தமிழகத்தின் பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல், நேற்று தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சவுக்கு சங்கர் தரப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை, சிபிசிஐடி போலீசார் விசாரிக்க, காவல் துணை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தன் தாயின் உயிரை பணையம் வைத்து சேனல் நடத்த முடியாது என்பதால், தனது சவுக்கு சேனலை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்தார்.

மேலும் படிக்க ...