இந்தியா, மார்ச் 10 -- தேசியக் கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 3 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. மக்களவை கேள்வி நேரத்தின்போது, தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கல்வித்திட்டம், பிஎம் ஸ்ரீ கல்வி நிதி தொடர்பாக திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கனிமொழி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுகவினர் நேர்மையற்று இருக்கிறார்கள். அவர்கள் நேர்மையோடு இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்தார்கள். அவர்கள் ...