இந்தியா, பிப்ரவரி 21 -- தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற மத்திய அரசு வலியுறுத்துவது, தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்காவிடில், மத்திய அரசின் நிதியான ரூபாய் ஐந்தாயிரம் கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில ஷரத்துக்கள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதும், இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.