டெல்லி,புது டெல்லி,சென்னை, மார்ச் 10 -- தேசிய கல்விக் கொள்கை : நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், லோக்சபாவில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிடியான பதிலளித்தார். நாடாளுமன்றத்தில் நடந்த விவாத்தின் முழு விபரம் இதோ:

திமுக எம்.பி., தமிழகச்சி தங்கப்பாண்டியன், கேள்வி எழுப்பிய பேசியதாவது: ''2000 கோடி என்பது பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கவலை தெரிவித்திருக்கிறார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்விக்காக ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தராமல் இ...