இந்தியா, மார்ச் 12 -- சென்னையில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய குழு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று (மார்ச் 12) அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுத்தனர்.

சென்னையில் வருகிற மார்ச் 22ம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்சிகளை கலந்துகொள்ள வேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பதற்காக, ...