இந்தியா, ஏப்ரல் 22 -- பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் மகன் பரந்தாமன் தெறி படத்தின் போது நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் பேசும் போது, 'தயாரிப்பு சார்ந்த பணிகளில் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அதனுடைய அழுத்தத்தை நான் அப்பாவிடம் கொண்டு செல்ல மாட்டேன். முடிந்தவரை, நானே சமாளிக்க முயற்சி செய்வேன்.

ஷூட்டிங்ங்கெல்லாம் முடிந்த பிறகு தான் இப்படியெல்லாம் பிரச்சினைகள் நடந்ததா என்று அப்பா கேட்டு இருக்கிறார். அப்படி ஒரு சம்பவம் தெறி திரைப்படத்தில் நடந்தது. தெறி படத்தில் மிகப்பெரிய பாலத்தில் இருந்து விஜய் சார் குதிக்கும் காட்சி உங்களுக்கு ஞாபகம் இருக்கும்;அந்த காட்சியை எடுக்கும் பொழுது, கிட்டத்தட்ட 2000 பேரை நாங்கள் அழைத்திருந்தோம்.

அப்போது செட்டில் இருந்த உதவி இயக்...