இந்தியா, மார்ச் 11 -- ஒருவரது தினசரி வாழ்க்கையில் தூக்கம் என்பது முக்கியமான ஒன்றாகும். நிம்மதியாக தூங்கினால் மட்டுமே அடுத்த நாள் சுறு சுறுப்பாக இயங்க முடியும். எனவே தூக்கம் தவறினால் இயல்பாக செயல்பட முடியாது. இந்த நிலையில் இந்தியர்களின் தூக்கம் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் 59 சதவீதம் பேர் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் போதுமான அளவு தூங்குவதில்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அடிக்கடி கழிவறைக்கு செல்வது முதல் மொபைல் போன் பயன்பாடு ஆகியவை காரணமாக 59 சதவீத மக்கள் ஆறு மணி நேரத்திற்கும் குறைவான இடைவிடாத தூக்கத்தைப் பெறுகிறார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீர் கழிப்பதற்காக மீண்டும் மீண்டும் எழுந்திருக்க வேண்டியிருப்பது, இரவு நேரத...