இந்தியா, மே 13 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசி கழுத்தில் தாலி கட்ட தயாரான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது தியாவை தூங்க வைத்த துளசி, அப்படியே அவளும் தூங்கி விட, வெற்றி யாருக்கும் தெரியாமல் அவளது கழுத்தில் தாலி கட்டுகிறான். அதன் பிறகு அங்கிருந்து தப்பிக்க மேலும் போது ரேவதியின் அம்மா புவனா வெற்றியைப் பிடித்து விடுகிறார்.

கண் தெரியாத அவர் வெற்றியின் கையைப் பிடித்துக் கொண்டு யார் நீ என கேட்க, வெற்றி பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து தப்பிக்கிறான். அடுத்த நாள் காலையில் துளசி கண்விழித்து துணியை மடிக்கும்போது கழுத்தில் தாலி தொங்குவதை பார்த்து அத...