இந்தியா, ஏப்ரல் 20 -- மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி என மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்து உள்ளார்.

ஈஸ்டர் திருநாளையொட்டி மல்லை சத்யா தனது முகநூலில் இட்டுள்ள பதிவில், புயலின் முகங்களே, பூகம்பத்தின் விதைகளே, வணக்கம்! நலம் வாழிய, நலனே! இன்று, 20-04-25, ஞாயிற்றுக்கிழமை, இறைமகன் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த புனித ஈஸ்டர் திருநாள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அருகிலிருந்த குகைச் சவக்குழியில் வைக்கப்பட்டு, பெரிய கல்லால் மூடப்பட்டு அடைக்கப்பட்டார். சனிக்கிழமை ஒய்வு நாளுக்குப் பின்னர், மூன்றாம் நாள், இயேசுவைப் பின்தொடர்ந்த கலிலியாவைச் சேர்ந்த சில பெண்கள், அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்க்க வந்தனர். அப்போது, ஆச்சரியமாக, கல்லறை திறக்கப்பட்டிருந்தது. அதன் அருகே இரண்ட...