இந்தியா, ஏப்ரல் 19 -- "நம்பிக்கை துரோகம் செய்தவன்" என்று என்னை யாரும் சொல்லக் கூடாது என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உருக்கமான சமூகவலைத்தள பதிவை இட்டு உள்ளார்.

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகி உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மதிமுகதுணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா பதிவிட்டுள்ள சமூகவலைத்தள பதிவு வைரல் ஆகி வருகிறது.

மல்லை சத்யா தனது பதிவில், மதிமுக தலைவர் வைகோவை தனது அரசியல் ஆசானாகவும், தந்தையாகவும் குறிப்பிட்டு, "எனக்கு அரசியல் முகவரி தந்தவர் திரு.வைகோ. அவரது இதயத்தில் இருந்து என்னை எந்த சக்தியாலும் நீக்க முடியாது. என் வாழ்வின் கடைசி மணித்துளியும் 'வைகோ, வைகோ' என்றே உச்சரிக்கும்," என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். 1993-ல் மதிமுகவில் இணைந்ததிலிருந்து, வைகோவின் தலைமையில் தனது அரசியல் பயணம...