இந்தியா, ஏப்ரல் 20 -- மல்லை சத்யா மட்டும் வைகோவின் சேனாதிபதி அல்ல; மதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் சேனாதிபதிதான் என துரை வைகோ தெரிவித்து உள்ளார்.

மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகிய துரை வைகோ, மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

மதிமுகவின் கட்சிப் பொறுப்பிலிருந்து பதவி விலகிய முடிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, துரை வைகோ, "நான் வெளியிட்ட அறிக்கையில் இருந்து பின்வாங்கவில்லை. என் முடிவில் உறுதியாக இருக்கிறேன்," என்றார்.

மதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் தனது பெயரை உரக்கக் கூறி வரவேற்பதைப் பற்றி குறிப்பிட்ட துரை வைகோ, "இந்த இயக்கம் என்றால் வைகோ. வைகோ என்றால் மதிமுக. இதில் எந்த மாற்றமும் இல்லை. மதிமுகவுடனான எனது பயணம் தொடர்கிறது," என்று உறுதிப்படுத்தினார்.

மாவட்ட...