இந்தியா, ஏப்ரல் 20 -- துரை வைகோ - மல்லை சத்யா சமாதானம் ஏற்பட்டு உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையேயான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு, இருவரும் இணைந்து கட்சி நலனுக்காக பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். துரை வைகோ தனது பதவி விலகல் முடிவை திரும்பப் பெற்று, முதன்மைச் செயலாளராக தொடர உறுதியளித்தார். மதிமுக தலைவர் வைகோவின் முயற்சியால் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த சமாதானம் எட்டப்பட்டது, கட்சியில் நிலவிய பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக கட்சி அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்திற்கு பின், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

கூட்ட...