இந்தியா, ஏப்ரல் 22 -- பெரு நாட்டின் லிமாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதி நாளில், டிராப் கலப்பு அணி போட்டியில், இந்திய துப்பாக்கி சுடும் வீரர்பிருத்விராஜ் தொண்டைமான் மற்றும் வீராங்கனை பிரகதி துபே ஜோடி பதக்கச் சுற்றை எட்டத் தவறினர். இதையடுத்து, இந்த தொடரில் இந்தியா மூன்றாவது இடத்துடன் முடித்துகொண்டது.

திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் இந்தியாவின் இறுதிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உட்பட இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.

அமெரிக்காவும் ஏழு பதக்கங்களை வென்றிருந்தாலும், அதிக தங்கப் பதக்க எண்ணிக்கையுடன் இந்தியாவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சீனா நான்கு தங்கம், மூன்ற...