இந்தியா, மே 19 -- ஊகத்தைத் தூண்டும் வகையில் விமானத்தில் நடந்த மர்மமான முறையில் ராப் பாடல் பாடப்பட்டது. இதனை 'ரெட் என்வலப் சொசைட்டி' பாடச்சொன்னதாக அறியப்படுகிறது.

விமானத்தில் நடந்த ஒரு விசித்திரமான நிகழ்ச்சி பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, இணையத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரெட் என்வலப் சொசைட்டி என்றால் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்துப் பார்ப்போம்.

டெல்லியிலிருந்து துபாய்க்கு சென்ற ஒரு விமானத்தில், ஃபார்மல் உடையில் அமைதியான தோற்றத்தில் இருந்த ஒரு நபர், விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்து, உற்சாகமான ராப் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினார். சுமார் 30 விநாடிகள் நீடித்த இந்த ராப் பாடல் நிகழ்ச்சி, விமானத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல், இணையத்தில் பல்வேறு ஊகங்களையும் ...