புதுச்சேரி,துபாய்,சென்னை, ஏப்ரல் 7 -- உலக பொதுமறையான திருக்குறளை மேலும் அதிகப்படியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் SKYBLUE MEDIA - டத்தோ மணிகண்டமூர்த்தி நடத்தும் மாபெரும் திருக்குறள் விழா நிகழ்ச்சி துபாய் ஷேய்க் ரஷீத் ஆடிட்டோரியமில் மே 4ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருத்தினர்களாக புதுச்சேரி முதலமைச்சர் N.ரெங்கசாமி, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், இளம் இசைக் கலைஞரான லிடியன் நாதஸ்வரம், தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன், அனல் பறக்கும் தனது பேச்சால் தனி அடையாளம் கண்ட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பேச்சாளர் பிரபல வழக்கறிஞர் சுமதி மற்றும் பல்வேறு முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

மிகப்பிரமாண்டமாக நடக்கவிருக்கும் திருக்குறள் மகாமேடையில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெறவிருக்கிறது . ...